வியாழன், 28 பிப்ரவரி, 2013

கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?


 நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும். 20 ரூபாயானால் செவ்வகமாகவும், 50 ரூபாய்   சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும், 1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு இருக்காது.

எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ?

வணக்கம் நண்பர்களே ! மீண்டுமோர் குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது பற்றி விரிவாக அலசுவோம்.நம் குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு முன்பருவபள்ளி(Preschool) ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்
எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது.இதில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.
நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. கீழே உள்ள அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு உலகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிட வேண்டாம்.ஏனெனில் படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது

குழந்தைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்துதலில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :
  • ஊக்குவித்தல்
  • எழுதும் இடமும் நேரமும்
  • அணுகுமுறையில் மாற்றம்
  • தனித்தன்மை
  • பாராட்டுதல்
  • ரோல் மாடல்
  • தகவல்தொடர்பு
  • செவிவழி திறன்
  • பட்டியலிடுதல்
  • வாசிக்கும் பழக்கம்

இனி இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்
1.ஊக்குவித்தல்
உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக,அவர்களை வற்புறுத்துதல் மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்வது கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஸனரி உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.
நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம்.  உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.
2.எழுதும் இடமும் நேரமும் 
உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.
3.அணுகுமுறையில் மாற்றம்
ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கமுடியாத அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.

தென்னையில் அதிக விளைச்சல் பெற வேண்டுமா?


தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும் படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.

ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில் மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும் மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு, போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட சத்துக்களும் அடங்கியுள்ளன.
இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.
மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும் தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.
தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும் உதவுகிறது.
கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக உருவாக உதவுகிறது.
கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர் பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.
சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின் வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.
இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள் நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.
தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட் 500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம், தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம் புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம் ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ் இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம் 3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.  
நான்கு ஆண்டு
நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு யூரியா 2 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும், பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 5 கிலோவும் இட வேண்டும். குறிப்பாக இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.
இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.
தகவல்:  ஜி.எஸ்.வி அமுதன்,மதுரை.

ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.

கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.

2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.

4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்துவிடும். இந்த வகையான புற்களை ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்கள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.

இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில்  வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.

எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.

சத்துள்ள விளை நிலம் ஒரு பொன் விளையும் பூமி
நிலத்தில் எதைப் போட்டாலும் விளைச்சல் இல்லை; லாபம் இல்லை என்று சலித்துக் கொள்ளும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மண் எப்போதும் மனிதர்களை ஏமாற்றுவது இல்லை. இந்த சலிப்பு தான், சோறு போடும் நிலங்களை ரியல்எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு விவசாயிகள் ஓட்டாண்டிகளாக ஆக வழி செய்கிறது. ஊக்கமும், முடியும் என்ற எண்ணமும் இருந்தால் நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றலாம். விவசாயமே படிக்காத, விவசாயத்தில் பழக்கமே இல்லாத பாரதி " காணி நிலம் வேண்டும்" என்று பாடியதில் இருந்த ஊக்கம் விவசாயிகளுக்கு இல்லையே என்பது தான் வேதனை. மழை ஏமாற்றினால் கூட எளிதாக பாசனம் செய்யலாம்; அந்த விவசாயி தனது நிலத்தில் பண்ணைக்குட்டை என்ற நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கியிருந்தால்!

அதாவது மழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க செயற்கையான குட்டை போன்ற அமைப்பில் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டும். அந்த குட்டையில் உள்ள நீர் ஆவியாகி விடாதபடி குட்டையின் கரையை சுற்றிலும் மரங்களை நட்டு வைத்திருக்க வேண்டும். பிறகு ஏன் நீர் பற்றாக்குறை வரப்போகிறது? எனவே, விவசாயிகளே நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யாதீர்கள். ஊக்கத்துடன் பயிரிடுங்கள். அதற்கு முன் உங்கள் மண்ணின் வளத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வகை மண்ணிலும் ஒவ்வொரு வகையான பயிர்கள் விளைகின்றன. மண் எத்தகைய வளம் மிக்கது, அந்த மண்ணில் எதை பயிரிடலாம் என்பதை தெரிந்து கொண்டால் தான் அதிக அளவில் மகசூலை பெற முடியும். இது நிலத்திற்கு மட்டும் அல்ல. வீட்டில் தொட்டிகளில் செடிகள் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொட்டியில் இடப்படும் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து கொள்வது நல்லது.

மண்ணின் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்து தான் பயிர்களின் வளர்ச்சி அமைகிறது. பார்வைக்கு செழிப்பாக தோன்றும் மண்ணில் சில சத்துக்குறைபாடு இருக்கலாம். எந்த சத்து குறைவாக இருக்கிறது என்பதை மண் பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

மண் பரிசோதனை முடிவுகளை வைத்து அந்த நிலத்தில் என்ன வகையான பயிர்களை விளைவிக்கலாம், எந்த வகை பழமரங்களை நடலாம் என்று முடிவு செய்யலாம். இந்த முடிவுகளை கொண்டு குறிப்பிட்ட அந்த மண்ணில் உள்ள எந்த சத்துக்கள் குறைவாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை தெரிந்து கொள்வதால், அந்த மண்ணில் குறைந்து காணப்படும் சத்துக்களை ஈடுகட்ட தேவையான உரங்களையும், மற்ற தாது உப்புக்களையும் இட்டு முழுமையான சத்துக்கள் நிரம்பிய மண்ணாக மாற்ற முடியும்.

மண்ணில் பொதுவான குறைபாடுகளாக சில பிரச்சினைகள் காணப்படுவதுண்டு. மேல் மண் இறுக்கம், ஆழமற்ற மண், உவர் மண் மற்றும் களிமண் ஆகிய பிரச்சனைகள் தான் அவை. இந்த குறைகளையும் நிவர்த்தி செய்து வளமான மண்ணாக மாற்றினால் எந்த நிலத்திலும் சிறப்பான முறையில் பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம்.

கீழ்க்காணும் உத்திகளால் மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும்.

மேல் மண் இறுக்கம்
மழைத்துளிகளால் நிலத்தில் வந்து  மோதும்போதும், டிராக்டர் போன்ற பெரிய கனஇயந்திரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாலும் மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை மண்ணில் நீரை பாய்ச்சினால், அந்த மண்ணின் மேல் உள்ள  மண்கட்டிகள் உடைந்து சிறு துகள்களாக பிரியும். அப்போது அதில் கலந்திருக்கும் களிமண், இரும்பு ஆக்சைடுடன் சேர்ந்து கொலகொலப்பான ஒரு கட்டி போல் மாறிவிடுகிறது. இதனை தடுத்து மண்ணின் பொலபொலப்பை அதிகரிக்க தொழுஉரம், நார்கழிவு, ஜிப்சம் இட்டு சரி செய்யலாம். இதனால் மண்ணின் நீரோட்டம் காற்றோட்டம் மற்றும் பௌதீகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகிறது.

ஆழமற்ற மண்
இந்த குறைபாடு இயற்கையிலேயே அமைந்தது. இதை மாற்றுவது கடினம். எனவே, இத்தகைய மண்ணில் மேல்வாரியாக வேர் பரவும் பயிர்களே நன்கு வளர வாய்ப்புள்ளது. ஒரளவிற்கு நெல் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் இந்த நிலங்களில் சரிவு ஏற்படாதவண்ணம் வரப்புகள் அமைத்தல் அவசியம்.

உவர் நிலம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது. முதலில் வயலை சமன் செய்து பின்பு நல்ல வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்கி பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

களர் நிலம்
மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக நீரில் கரையும் உப்பாக மாறி வெளியேற்றப்படுகின்றது. இது போல் பல முறை நீர் விட்டு கலக்கி பின் இருத்து வடிப்பதால் இந்த குறைபாட்டிலிருந்து மண்ணிற்கு நிவர்த்தி கிடைக்கிறது.

த்துடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய உத்தி உண்டு. பசுந்தாள் பயிர்கள் எனப்படும் சில சிறிய வகை பயிர்களை நிலத்தில் மக்க வைத்து அவற்றை நிலத்திற்கே உரமாக மாற்றி விடலாம். இந்த பயிர்களில் காணப்படும் சத்துக்கள் சத்தில்லாத நிலத்தை கூட சத்து மிகுந்த வலுவான நிலமாக மாற்றிவிடுகின்றன. அதையும் இங்கு பார்க்கலாம்.
பசுந்தாள் உர பயிர்கள்

மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் தேவையான தழைச்சத்தை பெற பசுந்தாள் உரங்கள் உதவுகின்றன. பசுந்தாள் உரப் பயிர்கள் இரண்டு வகைப்படும். பயறு வகை செடிகளான செஸ்பேரியா எனப்படும் சீமை அகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஒரு வகை. மரப்பயிர்களான அகத்தி, கிளசிரிடியா, சுபாபுல் போன்றவை மற்றொரு வகை. இவை தவிர தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை,எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பசுந்தாளுரங்களை மண்ணில் இடும் போது கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அவற்றை மக்க செய்கின்றன. அப்படி மக்கி சிதைக்கப்படும் போது இந்த செடிகளில் இருக்கும் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகின்றன. இவை பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன. நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவற்றிலிருந்து பல அங்கக அமிலங்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் நொதிகளும் மற்றும் சர்க்கரை பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையாத நிலையிலுள்ள ரசாயன உரங்களை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் படி எளிய படிவங்களாக மாற்றும். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும்.

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணிவேர்கள் கொண்டவை. அதனால் மண்ணில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதுடன் மண்ணிற்கு காற்றோட்டம், நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்க செய்கிறது. கோடையில் இந்த உரப்பயிர்களை பயிர் செய்வதால் மண் போர்வை போல் செயல்பட்டு மண் நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு மண் ஈரத்தால் வேண்டப்படாத உப்புக்கள் கரைந்து பயிர்களின் வேர்களை தாக்காத வண்ணம் வெளியேற்றப்படுகின்றன.

எனவே பயிர் செய்யாத கோடை காலங்களிலோ, பயிர் செய்வதற்கு முன் உரிய பருவ காலங்களில் மழை நீரைக் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை தனிப்பயிராக விதைத்து பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அதிக அளவில் அங்ககச் சத்து கிடைத்து மண்வளத்தை பெருக்கலாம். இவ்வாறு பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் இடுவதால் உரச்செலவையும் குறைக்கலாம். இந்த முறைகளை கையாண்டு மண்ணின் குறைகளை போக்கி விவசாயிகள் மண்ணில் பொன்னை காணலாம்.

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா: இன்று தேசிய அறிவியல் தினம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.


முன்னோடி:

எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் "3ஜி' மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், "டெஸ்ட் டியூப்' குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

அப்போ... இப்போ...:

இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.


யார் காரணம்:

தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்' நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை' கண்டுபிடித்தார். "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

தலை நிமிர வைத்தவர்கள்:

இந்தியா அறிவியல் அரங்கில் "டாப்-20' இடத்துக்குள் இருப்பதற்கு, பல அறிவியலாளர்கள் உழைத்துள்ளனர். அவர்கள்:

பெயர் துறை
* ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்
* விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்
* ராமானுஜம் கணிதம்
* எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை
* எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
* சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு
* சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்
* அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி

நன்றி  

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பிளாகர் கணக்கை உருவாக்குவது எப்படி?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் மொழிகளில் நீங்கள் இன்னும் விரிவான பதில்களைக் காணலாம்:
Deutsch 
English (US) 
English (UK) 
Español 
Français 
Italiano 
Nederlands 
Português (Brasil) 
Русский 
中文(简体) 
中文 (繁體) 
日本語 
한국어 
Dansk 
Norsk 
Suomi 
Svenska 
ภาษาไทย 
Türkçe 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

தொடங்குதல்

பிளாகர் கணக்கை உருவாக்குவது எப்படி?
பிளாகர் முகப்பில், "இப்போதே வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்து, Google கணக்கு உருவாக்கவும். நீங்கள் முன்பே orkut, Google குழுக்கள், Gmail மற்றும் வேறு ஏதேனும் Google தயாரிப்புகளை பயன்படுத்தியிருந்தால், உங்களிடம் Google கணக்கு இருக்கும் - அப்படியென்றால், நீங்கள் நேரடியாக உள்நுழையலாம். பின்னர், காட்சிப் பெயரைத் தேர்வுசெய்து, பிளாகரின் சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்க. இவை அனைத்தும் முடிந்ததும், வலைப்பதிவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்!
பிளாகரில் வலைப்பதிவை உருவாக்குவது எப்படி?
பிளாகர் கணக்கை நீங்கள் உருவாக்கியதும், www.blogger.com இல் உள்நுழைந்து "வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்க. 2 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான தலைப்பு, முகவரியை (URL) உள்ளிடுக. சொல் சரிபார்ப்புப் பெட்டியில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து, நீங்கள் இயந்திரம் அல்ல மனிதர்தான் என்பதை உறுதிசெய்க, அடுத்து "தொடர்க" என்பதைக் கிளிக் செய்க. 3 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான டெம்ப்ளேட்டை தேர்வுசெய்யலாம்; உங்கள் வாசகர்களுக்கு இப்படித்தான் வலைப்பதிவு காண்பிக்கப்படும். உங்களுக்கான புதிய வலைப்பதிவை பிளாகர் உருவாக்கிவிடும். இது 2 ஆம் படியில் நீங்கள் தேர்வுசெய்த முகவரியில் தோன்றும்.

வலைப்பதிவில் இடுகையிடுவது எப்படி?
உங்கள் Dashboard இல், நீங்கள் இடுகையிட விரும்பும் வலைப்பதிவிற்கு அடுத்து உள்ள "புதிய இடுகை" என்பதைக் கிளிக் செய்க. வலைப்பதிவிற்கு ஒரு தலைப்பை (விரும்பினால்) வழங்கி, இடுகையை உள்ளிடுக. பிறகு, முன்னோட்டத்தை "மாதிரிக்காட்சி" இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் காணலாம். உங்கள் இடுகையை வெளியிடலாம் என்ற முடிவிற்கு வந்தபின்னர், "வெளியிடு" என்பதைக் கிளிக் செய்க.
படங்களை இடுகையிடுவது எப்படி?
இடுகைத் திருத்தியின் கருவிப்பட்டியில் உள்ள பட ஐகானைப் பயன்படுத்தி புகைப்படங்களை நீங்கள் பதிவேற்றலாம். இந்த ஐகானை நீங்கள் கிளிக் செய்யும்போது, உங்கள் கணினியிலிருந்து ஒரு படம் அல்லது பல படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாளரம் காண்பிக்கப்படும். உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிய, "உலாவு" என்பதைக் கிளிக் செய்தால் போதும். மாறாக, ஏற்கனவே ஆன்லைனில் இருக்கும் படத்தை உங்கள் இடுகையில் செருகுவதற்கு அதன் URL ஐ நீங்கள் உள்ளிடலாம். உங்கள் இடுகையில் படங்கள் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்க, தளவமைப்பைத் தேர்வு செய்வதற்கான இணைப்பை நீங்கள் கிளிக் செய்க. படங்களைச் சுற்றி, இடுகையின் உரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இடது, மையம், வலதுபுறம் போன்றவை தீர்மானிக்கும். இடுகையிடும் பகுதிக்குள்ளே, வெவ்வேறான அளவுகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க அளவு என்ற விருப்பம் உதவும்.

சுயவிவரத்தில், புகைப்படத்தைச் சேர்ப்பது எப்படி?
முதலில், உங்கள் டாஷ்போர்டில் உள்ள "சுயவிவரத்தைத் திருத்து" என்ற இணைப்பைக் கிளிக் செய்க. "புகைப்படம்" என்ற பிரிவுக்கு கீழ்நோக்கி உருட்டி செல்க, அதில், உங்கள் கணினியிலிருந்து கோப்பைத் தேர்வு செய்யலாம் அல்லது, உங்களுக்கு தேவையான புகைப்படம் ஆன்லைனில் இருந்தால் அதன் URL ஐ உள்ளிடலாம். படத்தின் அளவு 50k அல்லது அதைவிடச் சிறிய அளவில் இருக்கவேண்டும்.
வலைப்பதிவின் தலைப்பு எங்கு தோன்றும்?
உங்கள் வலைப்பதிவின் தலைப்பு பிளாகரின் அமைப்புகள் | அடிப்படை தாவலில் அமைக்கப்பட்டபடி, வெளியிடப்பட்ட வலைப்பதிவில், Dashboard இல் மற்றும் சுயவிவரத்தில் என பல இடங்களில் தோன்றும். ஆக்கப்பூர்வமாக படைத்திடுங்கள்!
URL என்பது என்ன?

URL என்பது, வலையில் உள்ள ஏதேனும் ஒரு கோப்பின் முகவரியாகும், எடுத்துக்காட்டு www.example.com, அல்லதுfoo.example.com. வலைப்பதிவை உருவாக்கும் செயலாக்கத்தின்போது, உங்கள் வலைப்பதிவிற்கான URL ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலாவி முகவரிப்பட்டியில், இந்த URL ஐத் தட்டச்சு செய்வதன் மூலம் உங்கள் வலைப்பதிவைப் பார்வையாளர்கள் அணுகலாம். முன்பே மிக அதிகளவிலான Blogspot வலைப்பதிவுகள் உள்ளதால், இருக்கக்கூடிய ஒன்றைக் கண்டறிவதற்கு முன், வித்தியாசமான வேறுபட்ட சில URLகளை நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் URL இன் வடிவமைப்புnameyouchoose.blogspot.com போல இருக்கும். உங்கள் வலைப்பதிவின் URL ஐத் தேர்ந்தெடுக்கும்போது, எழுத்துக்கள், எண்கள் மற்றூம் சிறுகோடுகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். $, #, &, போன்ற சிறப்பு எழுத்துக்குறிகள் அனுமதிக்கப்படாது.

தனிப்பயன் டொமைனிலும் நீங்கள் வலைப்பதிவை ஹோஸ்ட் செய்யலாம்.

உங்கள் கணக்கு

என்னால் உள்நுழைய முடியவில்லை. நான் என்ன செய்வது?
"உங்கள் கணக்கை அணுகமுடியவில்லையா?" என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் Google கணக்கின் உள்நுழைவுத் தகவலை மீட்கலாம். இந்த இணைப்பு பிளாகர் உள்நுழைவு பக்கத்தில் இருக்கும் அல்லது நீங்கள் Google கணக்குகடவுச்சொல் உதவி பக்கத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் Google கணக்கின் பயனர்பெயர் என்பது, உங்கள் கணக்கை (எ.கா. yourname@example.com) உருவாக்கப் பயன்படுத்திய முழு மின்னஞ்சல் முகவரியாகும். உங்கள் கணக்கில் உள்நுழைந்தும், உங்கள் Dashboard இல் தகுந்த வலைப்பதிவைப் பார்க்க முடியவில்லை என்றால், தவறான கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கலாம். இதுபோன்றதொரு சூழ்நிலையில், தேவைப்பட்டால் கடவுச்சொல் உதவிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டும் உள்நுழைய முயற்சி செய்க. உங்களிடம் ஒரே ஒரு கணக்குதான் இருக்கிறது என்றாலும் இதை முயற்சித்து பார்க்கவும். தனக்கே தெரியாமல், தவறுதலாக கூடுதல் கணக்கை பல பயனர்கள் உருவாக்கிவிடுவார்கள், அதனால் இதை நீங்கள் சோதிப்பது உங்கள் வலைப்பதிவை மீண்டும் பெறுவதற்கான விரைவான வழியாகும்.
வலைப்பதிவை நீக்குவது எப்படி?
மொத்த வலைப்பதிவையும் நீக்குவதற்கு, அமைப்புகள் | அடிப்படை தாவலுக்குச் செல்க. சரியான வலைப்பதிவில்தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதையும், அந்த வலைப்பதிவை உங்கள் கணக்கிலிருந்து நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்கள் என்பதையும் உறுதிபடுத்துக. "இந்த வலைப்பதிவை நீக்கு" என்பதைக் கிளிக் செய்க. உங்கள் வலைப்பதிவில் பதிவேற்றிய புகைப்படங்கள் தவிர்த்து, அனைத்தும் நீக்கப்படும். இவை தொடர்ந்து Picasa ஆல்பங்களில் இருக்கும். இவற்றை picasaweb.google.com செல்வதன் மூலம் நீங்கள் அணுகலாம்.
கணக்கை ரத்து செய்வது எப்படி?
உங்கள் Google கணக்கை நீக்குவதன் மூலம் உங்கள் வலைப்பதிவுகளை நீக்குவதற்கு, Google கணக்குகள் முகப்புப்பக்கத்தில்உள்நுழைக. பிறகு "எனது தயாரிப்புகள்" பட்டியலுக்கு அடுத்துள்ள "திருத்து" என்பதைக் கிளிக் செய்க, அதன் மூலம் உங்கள் கணக்கை நீக்குவதற்கானப் பக்கத்தைப் பெறுவீர்கள். ஒரு கணக்கை அகற்றுவது, உங்கள் கணக்குடன் தொடர்புடைய orkut சுயவிவரம், உங்கள் iGoogle பக்கம் மற்றும் உங்கள் பிளாகர் வலைப்பதிவுகள் போன்று Google சேவைகளுடன் தொடர்புடைய அனைத்தையும் நீக்கிவிடும்.

பிளாகர் அம்சங்கள்

பிளாகரின் வடிவமைப்பு அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
 உங்கள் டேஷ்போர்டில் உங்கள் வலைப்பதிவின் பெயரைக் கண்டறிந்து, அதற்கு அடுத்து இருக்கும் "வடிவமை" என்ற இணைப்பைக் கிளிக் செய்க. உங்கள் டெம்ப்ளேட்டில் உள்ள உறுப்புகளை விரும்பிய இடத்தில் தோன்றச் செய்ய ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இழுத்து விடுவதன் மூலம், அவற்றை இங்கே ஒழுங்கமைக்கலாம். பெரும்பாலான டெம்ப்ளேட்களில், வழிசெலுத்தும் பட்டி, வலைப்பதிவு இடுகைகள் மற்றும் மேற்தலைப்பைத் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் நகர்த்திக்கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவுப் பக்கத்தில் அல்லது பக்கப்பட்டியில், கேஜெட்களைச் சேர்க்க விரும்பினால், "கேஜெட்டைச் சேர்" என்பதைக் கிளிக் செய்தாலே போதும். கேஜெட்களைத் தேடி, அவற்றைச் சேர்த்து, உங்கள் வலைப்பதிவுடன் சேமிக்கக்கூடிய உலாவக்கூடிய பாப்-அப் சாளரத்தை இந்த செயல் திறக்கும்.

ஒன்றிற்கும் மேற்பட்டவர்களின் இடுகைகளைக் கொண்ட வலைப்பதிவை உருவாக்கலாமா?
ஆம், இவை "கூட்டு வலைப்பதிவுகள்" எனப்படுகின்றன. பொதுவாக, இதை ஒருவர் உருவாக்கி, மற்றவர்களை இதில் சேருமாறு அழைப்பார். கூட்டாளர்கள், நிர்வாகிகளாகவோ அல்லது வழக்கமான இடுகையாளர்களாவோ இருப்பர். அனைத்து இடுகைகளையும் (தங்களின் சொந்த இடுகைகளை மட்டுமின்றி) நிர்வாகிகள் திருத்தலாம், குழு உறுப்பினர்களை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் (நிர்வாக அணுகலை வழங்கலாம்) மற்றும் வலைப்பதிவு அமைப்புகளைத் திருத்தலாம். நிர்வாகிகள் அல்லாதவர்கள் வலைப்பதிவில் இடுகையிட மட்டுமே முடியும்.     வலைப்பதிவில் சேர, மற்றவர்களை அழைக்க அமைப்புகள் | அனுமதிகள் தாவலுக்குச் சென்று, "ஆசிரியர்களைச் சேர்" என்பதைக் கிளிக் செய்க. அடுத்து, நீங்கள் அழைக்கவிருக்கும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தட்டச்சு செய்க; விரைவில் அவர்கள் உங்களுடைய மின்னஞ்சல் அழைப்பிதழைப் பெறுவார்கள். Blogspot இல் வலைப்பதிவிட Google கணக்கு அவசியம், நீங்கள் அழைக்க விரும்பும் ஆசிரியர்களிடம் ஏற்கனவே Google கணக்குகள் இல்லாவிட்டால், ஒன்றை உருவாக்கும்படி கேட்கப்படுவார்கள். அழைப்பிதழ்களை அனுப்ப தயார் என்றால், "அழை" என்பதைக் கிளிக் செய்க. வலைப்பதிவில் ஒரு புதிய கூட்டாளர் வெற்றிகரமாக சேர்ந்துவிட்டால், அதுகுறித்த மின்னஞ்சல் ஒன்றைப் பெறுவீர்கள்.

இடுகைகளுக்கு லேபிள் இடுவது எப்படி?
ஒரு இடுகையை எழுதும்போது, அந்த படிவத்தின் கீழ்பகுதியில் "இந்த இடுகைக்கான லேபிள்கள்" என்று குறிக்கப்பட்ட ஒரு இடத்தைக் காண்பீர்கள். நீங்கள் விரும்பும் எந்தவொரு லேபிளையும், காற்புள்ளிகளால் பிரித்து உள்ளிடுக. நீங்கள் முன்பே பயன்படுத்திய லேபிள்களின் பட்டியலைக் காண்பிப்பதற்கு, "எல்லாம் காண்பி" என்ற இணைப்பையும் நீங்கள் கிளிக் செய்யலாம். அவற்றை சேர்ப்பதற்கு, லேபிள்களில் கிளிக் செய்தால் போதும். உங்கள் இடுகையை வெளியிடும்போது, கீழ்ப்புறத்தில் லேபிள்கள் தோன்றும். ஏதேனும் ஒரு லேபிள்களைக் கிளிக் செய்யும்போது, அந்த லேபிளை மட்டும் கொண்ட இடுகைகள் உள்ள பக்கத்திற்கு செல்லும். அகரவரிசையின்படி அல்லது பயன்பாட்டின்படி வரிசையாக்கப்பட்ட உங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டியில் உள்ள எல்லா லேபிள்களின் பட்டியலையும் நீங்கள் சேர்க்கலாம்.
வலைப்பதிவில், AdSense ஐ சேர்ப்பது எப்படி?
தள ஓடை என்றால் என்ன, அதை செயலாக்குவது எப்படி?
பிளாகர் மொபைல் இயங்குவது எவ்வாறு?
இடுகையிடல் படிவத்தில், சொல் சரிபார்ப்பை எதற்காக கொண்டிருக்க வேண்டும்?
இடுகையிடும்போது, விசைப்பலகைக் குறுக்குவழிகளை நான் பயன்படுத்தலாமா?
ஒலிபெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
பிளாகரின் இடுகைத் திருத்தியை பயன்படுத்துவது எப்படி?
எனது வலைப்பதிவில் தனிப்பயன் களத்தை நான் எப்படி பயன்படுத்துவது?
வலைப்பதிவிற்கான தனிப்பயன் களப்பெயரை எங்கே பெறலாம்?
வலைப்பதிவில் தேதிகளின் வடிவமைப்பை மாற்றுவது எப்படி?
இடுகை டெம்ப்ளேட் என்றால் என்ன?
பின்னிணைப்புகள் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது?
சொல் சரிபார்ப்பு விருப்பம் என்றால் என்ன?
வலைப்பதிவு தளவமைப்பின் HTML ஐ திருத்தலாமா?"
பட்டியலிடுதல்" அமைப்பு எதற்கு உதவுகிறது?

வலைப்பதிவு மதிப்பாய்வு

எனது வலைப்பதிவு ஏன் முடக்கப்பட்டது?"கொடியிடு" என்றால் என்ன?
எனது வலைப்பதிவில் உள்ள கருத்துரைகளை நான் எவ்வாறு மதிப்பாய்வு செய்வது?
சட்டப்பூர்வ சிக்கல் குறித்து நான் எங்கு புகார் அளிக்கலாம்?
http://support.google.com/blogger/bin/answer.py?hl=ta&answer=175250 
புதுப்பிக்கப்பட்டது 03/29/2012

இந்தத் தகவல் உதவிகரமாக இருந்ததா?