அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எங்களிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் மொழிகளில் நீங்கள் இன்னும் விரிவான பதில்களைக் காணலாம்:
Deutsch English (US) English (UK) Español | Français Italiano Nederlands Português (Brasil) | Русский 中文(简体) 中文 (繁體) 日本語 | 한국어 Dansk Norsk Suomi | Svenska ภาษาไทย Türkçe |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
தொடங்குதல்
பிளாகர் கணக்கை உருவாக்குவது எப்படி?
பிளாகர் முகப்பில், "இப்போதே வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்து, Google கணக்கு உருவாக்கவும். நீங்கள் முன்பே orkut, Google குழுக்கள், Gmail மற்றும் வேறு ஏதேனும் Google தயாரிப்புகளை பயன்படுத்தியிருந்தால், உங்களிடம் Google கணக்கு இருக்கும் - அப்படியென்றால், நீங்கள் நேரடியாக உள்நுழையலாம். பின்னர், காட்சிப் பெயரைத் தேர்வுசெய்து, பிளாகரின் சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்க. இவை அனைத்தும் முடிந்ததும், வலைப்பதிவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்!
பிளாகரில் வலைப்பதிவை உருவாக்குவது எப்படி?
பிளாகர் கணக்கை நீங்கள் உருவாக்கியதும், www.blogger.com இல் உள்நுழைந்து "வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்க. 2 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான தலைப்பு, முகவரியை (URL) உள்ளிடுக. சொல் சரிபார்ப்புப் பெட்டியில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து, நீங்கள் இயந்திரம் அல்ல மனிதர்தான் என்பதை உறுதிசெய்க, அடுத்து "தொடர்க" என்பதைக் கிளிக் செய்க. 3 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான டெம்ப்ளேட்டை தேர்வுசெய்யலாம்; உங்கள் வாசகர்களுக்கு இப்படித்தான் வலைப்பதிவு காண்பிக்கப்படும். உங்களுக்கான புதிய வலைப்பதிவை பிளாகர் உருவாக்கிவிடும். இது 2 ஆம் படியில் நீங்கள் தேர்வுசெய்த முகவரியில் தோன்றும்.
வலைப்பதிவில் இடுகையிடுவது எப்படி?
உங்கள் Dashboard இல், நீங்கள் இடுகையிட விரும்பும் வலைப்பதிவிற்கு அடுத்து உள்ள "புதிய இடுகை" என்பதைக் கிளிக் செய்க. வலைப்பதிவிற்கு ஒரு தலைப்பை (விரும்பினால்) வழங்கி, இடுகையை உள்ளிடுக. பிறகு, முன்னோட்டத்தை "மாதிரிக்காட்சி" இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் காணலாம். உங்கள் இடுகையை வெளியிடலாம் என்ற முடிவிற்கு வந்தபின்னர், "வெளியிடு" என்பதைக் கிளிக் செய்க.
படங்களை இடுகையிடுவது எப்படி?
இடுகைத் திருத்தியின் கருவிப்பட்டியில் உள்ள பட ஐகானைப் பயன்படுத்தி புகைப்படங்களை நீங்கள் பதிவேற்றலாம். இந்த ஐகானை நீங்கள் கிளிக் செய்யும்போது, உங்கள் கணினியிலிருந்து ஒரு படம் அல்லது பல படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாளரம் காண்பிக்கப்படும். உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிய, "உலாவு" என்பதைக் கிளிக் செய்தால் போதும். மாறாக, ஏற்கனவே ஆன்லைனில் இருக்கும் படத்தை உங்கள் இடுகையில் செருகுவதற்கு அதன் URL ஐ நீங்கள் உள்ளிடலாம். உங்கள் இடுகையில் படங்கள் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்க, தளவமைப்பைத் தேர்வு செய்வதற்கான இணைப்பை நீங்கள் கிளிக் செய்க. படங்களைச் சுற்றி, இடுகையின் உரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இடது, மையம், வலதுபுறம் போன்றவை தீர்மானிக்கும். இடுகையிடும் பகுதிக்குள்ளே, வெவ்வேறான அளவுகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க அளவு என்ற விருப்பம் உதவும்.
சுயவிவரத்தில், புகைப்படத்தைச் சேர்ப்பது எப்படி?
முதலில், உங்கள் டாஷ்போர்டில் உள்ள "சுயவிவரத்தைத் திருத்து" என்ற இணைப்பைக் கிளிக் செய்க. "புகைப்படம்" என்ற பிரிவுக்கு கீழ்நோக்கி உருட்டி செல்க, அதில், உங்கள் கணினியிலிருந்து கோப்பைத் தேர்வு செய்யலாம் அல்லது, உங்களுக்கு தேவையான புகைப்படம் ஆன்லைனில் இருந்தால் அதன் URL ஐ உள்ளிடலாம். படத்தின் அளவு 50k அல்லது அதைவிடச் சிறிய அளவில் இருக்கவேண்டும்.
வலைப்பதிவின் தலைப்பு எங்கு தோன்றும்?
உங்கள் வலைப்பதிவின் தலைப்பு பிளாகரின் அமைப்புகள் | அடிப்படை தாவலில் அமைக்கப்பட்டபடி, வெளியிடப்பட்ட வலைப்பதிவில், Dashboard இல் மற்றும் சுயவிவரத்தில் என பல இடங்களில் தோன்றும். ஆக்கப்பூர்வமாக படைத்திடுங்கள்!
URL என்பது என்ன?
URL என்பது, வலையில் உள்ள ஏதேனும் ஒரு கோப்பின் முகவரியாகும், எடுத்துக்காட்டு www.example.com
, அல்லதுfoo.example.com
. வலைப்பதிவை உருவாக்கும் செயலாக்கத்தின்போது, உங்கள் வலைப்பதிவிற்கான URL ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலாவி முகவரிப்பட்டியில், இந்த URL ஐத் தட்டச்சு செய்வதன் மூலம் உங்கள் வலைப்பதிவைப் பார்வையாளர்கள் அணுகலாம். முன்பே மிக அதிகளவிலான Blogspot வலைப்பதிவுகள் உள்ளதால், இருக்கக்கூடிய ஒன்றைக் கண்டறிவதற்கு முன், வித்தியாசமான வேறுபட்ட சில URLகளை நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் URL இன் வடிவமைப்புnameyouchoose.blogspot.com
போல இருக்கும். உங்கள் வலைப்பதிவின் URL ஐத் தேர்ந்தெடுக்கும்போது, எழுத்துக்கள், எண்கள் மற்றூம் சிறுகோடுகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். $, #, &, போன்ற சிறப்பு எழுத்துக்குறிகள் அனுமதிக்கப்படாது.
தனிப்பயன் டொமைனிலும் நீங்கள் வலைப்பதிவை ஹோஸ்ட் செய்யலாம்.
உங்கள் கணக்கு
என்னால் உள்நுழைய முடியவில்லை. நான் என்ன செய்வது?
"உங்கள் கணக்கை அணுகமுடியவில்லையா?" என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் Google கணக்கின் உள்நுழைவுத் தகவலை மீட்கலாம். இந்த இணைப்பு பிளாகர் உள்நுழைவு பக்கத்தில் இருக்கும் அல்லது நீங்கள் Google கணக்குகடவுச்சொல் உதவி பக்கத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் Google கணக்கின் பயனர்பெயர் என்பது, உங்கள் கணக்கை (எ.கா. yourname@example.com) உருவாக்கப் பயன்படுத்திய முழு மின்னஞ்சல் முகவரியாகும். உங்கள் கணக்கில் உள்நுழைந்தும், உங்கள் Dashboard இல் தகுந்த வலைப்பதிவைப் பார்க்க முடியவில்லை என்றால், தவறான கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கலாம். இதுபோன்றதொரு சூழ்நிலையில், தேவைப்பட்டால் கடவுச்சொல் உதவிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டும் உள்நுழைய முயற்சி செய்க. உங்களிடம் ஒரே ஒரு கணக்குதான் இருக்கிறது என்றாலும் இதை முயற்சித்து பார்க்கவும். தனக்கே தெரியாமல், தவறுதலாக கூடுதல் கணக்கை பல பயனர்கள் உருவாக்கிவிடுவார்கள், அதனால் இதை நீங்கள் சோதிப்பது உங்கள் வலைப்பதிவை மீண்டும் பெறுவதற்கான விரைவான வழியாகும்.
வலைப்பதிவை நீக்குவது எப்படி?
மொத்த வலைப்பதிவையும் நீக்குவதற்கு, அமைப்புகள் | அடிப்படை தாவலுக்குச் செல்க. சரியான வலைப்பதிவில்தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதையும், அந்த வலைப்பதிவை உங்கள் கணக்கிலிருந்து நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்கள் என்பதையும் உறுதிபடுத்துக. "இந்த வலைப்பதிவை நீக்கு" என்பதைக் கிளிக் செய்க. உங்கள் வலைப்பதிவில் பதிவேற்றிய புகைப்படங்கள் தவிர்த்து, அனைத்தும் நீக்கப்படும். இவை தொடர்ந்து Picasa ஆல்பங்களில் இருக்கும். இவற்றை picasaweb.google.com செல்வதன் மூலம் நீங்கள் அணுகலாம்.
கணக்கை ரத்து செய்வது எப்படி?
உங்கள் Google கணக்கை நீக்குவதன் மூலம் உங்கள் வலைப்பதிவுகளை நீக்குவதற்கு, Google கணக்குகள் முகப்புப்பக்கத்தில்உள்நுழைக. பிறகு "எனது தயாரிப்புகள்" பட்டியலுக்கு அடுத்துள்ள "திருத்து" என்பதைக் கிளிக் செய்க, அதன் மூலம் உங்கள் கணக்கை நீக்குவதற்கானப் பக்கத்தைப் பெறுவீர்கள். ஒரு கணக்கை அகற்றுவது, உங்கள் கணக்குடன் தொடர்புடைய orkut சுயவிவரம், உங்கள் iGoogle பக்கம் மற்றும் உங்கள் பிளாகர் வலைப்பதிவுகள் போன்று Google சேவைகளுடன் தொடர்புடைய அனைத்தையும் நீக்கிவிடும்.
பிளாகர் அம்சங்கள்
பிளாகரின் வடிவமைப்பு அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
உங்கள் டேஷ்போர்டில் உங்கள் வலைப்பதிவின் பெயரைக் கண்டறிந்து, அதற்கு அடுத்து இருக்கும் "வடிவமை" என்ற இணைப்பைக் கிளிக் செய்க. உங்கள் டெம்ப்ளேட்டில் உள்ள உறுப்புகளை விரும்பிய இடத்தில் தோன்றச் செய்ய ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இழுத்து விடுவதன் மூலம், அவற்றை இங்கே ஒழுங்கமைக்கலாம். பெரும்பாலான டெம்ப்ளேட்களில், வழிசெலுத்தும் பட்டி, வலைப்பதிவு இடுகைகள் மற்றும் மேற்தலைப்பைத் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் நகர்த்திக்கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவுப் பக்கத்தில் அல்லது பக்கப்பட்டியில், கேஜெட்களைச் சேர்க்க விரும்பினால், "கேஜெட்டைச் சேர்" என்பதைக் கிளிக் செய்தாலே போதும். கேஜெட்களைத் தேடி, அவற்றைச் சேர்த்து, உங்கள் வலைப்பதிவுடன் சேமிக்கக்கூடிய உலாவக்கூடிய பாப்-அப் சாளரத்தை இந்த செயல் திறக்கும்.
ஒன்றிற்கும் மேற்பட்டவர்களின் இடுகைகளைக் கொண்ட வலைப்பதிவை உருவாக்கலாமா?
ஆம், இவை "கூட்டு வலைப்பதிவுகள்" எனப்படுகின்றன. பொதுவாக, இதை ஒருவர் உருவாக்கி, மற்றவர்களை இதில் சேருமாறு அழைப்பார். கூட்டாளர்கள், நிர்வாகிகளாகவோ அல்லது வழக்கமான இடுகையாளர்களாவோ இருப்பர். அனைத்து இடுகைகளையும் (தங்களின் சொந்த இடுகைகளை மட்டுமின்றி) நிர்வாகிகள் திருத்தலாம், குழு உறுப்பினர்களை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் (நிர்வாக அணுகலை வழங்கலாம்) மற்றும் வலைப்பதிவு அமைப்புகளைத் திருத்தலாம். நிர்வாகிகள் அல்லாதவர்கள் வலைப்பதிவில் இடுகையிட மட்டுமே முடியும். வலைப்பதிவில் சேர, மற்றவர்களை அழைக்க அமைப்புகள் | அனுமதிகள் தாவலுக்குச் சென்று, "ஆசிரியர்களைச் சேர்" என்பதைக் கிளிக் செய்க. அடுத்து, நீங்கள் அழைக்கவிருக்கும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தட்டச்சு செய்க; விரைவில் அவர்கள் உங்களுடைய மின்னஞ்சல் அழைப்பிதழைப் பெறுவார்கள். Blogspot இல் வலைப்பதிவிட Google கணக்கு அவசியம், நீங்கள் அழைக்க விரும்பும் ஆசிரியர்களிடம் ஏற்கனவே Google கணக்குகள் இல்லாவிட்டால், ஒன்றை உருவாக்கும்படி கேட்கப்படுவார்கள். அழைப்பிதழ்களை அனுப்ப தயார் என்றால், "அழை" என்பதைக் கிளிக் செய்க. வலைப்பதிவில் ஒரு புதிய கூட்டாளர் வெற்றிகரமாக சேர்ந்துவிட்டால், அதுகுறித்த மின்னஞ்சல் ஒன்றைப் பெறுவீர்கள்.
இடுகைகளுக்கு லேபிள் இடுவது எப்படி?
ஒரு இடுகையை எழுதும்போது, அந்த படிவத்தின் கீழ்பகுதியில் "இந்த இடுகைக்கான லேபிள்கள்" என்று குறிக்கப்பட்ட ஒரு இடத்தைக் காண்பீர்கள். நீங்கள் விரும்பும் எந்தவொரு லேபிளையும், காற்புள்ளிகளால் பிரித்து உள்ளிடுக. நீங்கள் முன்பே பயன்படுத்திய லேபிள்களின் பட்டியலைக் காண்பிப்பதற்கு, "எல்லாம் காண்பி" என்ற இணைப்பையும் நீங்கள் கிளிக் செய்யலாம். அவற்றை சேர்ப்பதற்கு, லேபிள்களில் கிளிக் செய்தால் போதும். உங்கள் இடுகையை வெளியிடும்போது, கீழ்ப்புறத்தில் லேபிள்கள் தோன்றும். ஏதேனும் ஒரு லேபிள்களைக் கிளிக் செய்யும்போது, அந்த லேபிளை மட்டும் கொண்ட இடுகைகள் உள்ள பக்கத்திற்கு செல்லும். அகரவரிசையின்படி அல்லது பயன்பாட்டின்படி வரிசையாக்கப்பட்ட உங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டியில் உள்ள எல்லா லேபிள்களின் பட்டியலையும் நீங்கள் சேர்க்கலாம்.
வலைப்பதிவில், AdSense ஐ சேர்ப்பது எப்படி?
தள ஓடை என்றால் என்ன, அதை செயலாக்குவது எப்படி?
பிளாகர் மொபைல் இயங்குவது எவ்வாறு?
இடுகையிடல் படிவத்தில், சொல் சரிபார்ப்பை எதற்காக கொண்டிருக்க வேண்டும்?
இடுகையிடும்போது, விசைப்பலகைக் குறுக்குவழிகளை நான் பயன்படுத்தலாமா?
ஒலிபெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
பிளாகரின் இடுகைத் திருத்தியை பயன்படுத்துவது எப்படி?
எனது வலைப்பதிவில் தனிப்பயன் களத்தை நான் எப்படி பயன்படுத்துவது?
வலைப்பதிவிற்கான தனிப்பயன் களப்பெயரை எங்கே பெறலாம்?
வலைப்பதிவில் தேதிகளின் வடிவமைப்பை மாற்றுவது எப்படி?
இடுகை டெம்ப்ளேட் என்றால் என்ன?
பின்னிணைப்புகள் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது?
சொல் சரிபார்ப்பு விருப்பம் என்றால் என்ன?
வலைப்பதிவு தளவமைப்பின் HTML ஐ திருத்தலாமா?"
பட்டியலிடுதல்" அமைப்பு எதற்கு உதவுகிறது?
வலைப்பதிவு மதிப்பாய்வு
எனது வலைப்பதிவு ஏன் முடக்கப்பட்டது?"கொடியிடு" என்றால் என்ன?
எனது வலைப்பதிவில் உள்ள கருத்துரைகளை நான் எவ்வாறு மதிப்பாய்வு செய்வது?
சட்டப்பூர்வ சிக்கல் குறித்து நான் எங்கு புகார் அளிக்கலாம்?
புதுப்பிக்கப்பட்டது 03/29/2012
இந்தத் தகவல் உதவிகரமாக இருந்ததா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக