வெள்ளி, 13 ஏப்ரல், 2012

பூண்டு கழிவுகள் இயற்கை உரம்

இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமாக மாறும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் லாபம் பெறுகின்றனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக  ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மண்ணின் வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.
பெரியகுளம் பகுதி விவசாயிகள் இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுகின்றனர்.
விவசாயி குமரவேல் கூறுகையில் “இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் மடிகின்றன.
மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. வாழை, கரும்பு, தென்னை பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரித்து லாபம் கிடைக்கிறது”என்றார்.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக