மண்
புழு உரத்தினால், உப்பு அதிகமான நிலங்களை திருத்தி, நல்ல நிலங்கள் மாற்ற
முடியும் என்று கண்டு பிடித்து இருக்கிறார், Dr சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்.
அவர், சென்னையில் உள்ள நியூ காலேஜில் உள்ள மண் பற்றிய ஆராய்ச்சி
நிறுவத்தின் (The Institute of
Research in Soil Biology and Biotechnology (IRSBB)) தலைவராக இருந்தவர்.
அப்போது, அவர், உத்தர் பிரதேசத்தில் உள்ள பூமி சுதர் நிகம் என்ற அமைப்போடு
சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடு பட்டார். அங்கே உள்ளே உப்பு/துவர் மண்ணில்
செய்த ஆராய்ச்சியில் இது தெரிய
வந்துள்ளது. அங்கே, 1 .2 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் உப்பு நிலங்கள் ஆகி
விட்டன. அதனால், பயிர்கள் விளைப்பு குறைந்து வந்துள்ளது. இதற்கு, பொதுவாக
விஞானிகள் ஜிப்சும் உப்பை நிலத்தில் போட்டு சரி செய்ய ஆலோசனை கொடுகின்றனர்.
திரு இஸ்மாயில் இப்படி வேதியியல் முறையில் நிலத்தை சரி செய்வதை விட மண்
புழு உரங்கள் மூலமாக சரி செய்தால், நிலம் பழயபடி நல்ல நிலமாக ஆகிறது
என்கிறார். இந்த முறை படி மாற்ற பட்ட நிலங்களில் , UP மாநிலத்தில், கோதுமை
நெல், முள்ளங்கி, வெங்காயம், உருளைகிழங்கு போன்றவை நல்லாக வளர்கின்றன.
இந்த முறை படி மோசமாக கேட்டு போன தோல் பதனிடும் உப்பு பட்ட நிலங்கள் கூட நல்ல நிலங்களாக மற்ற கூடிய சாத்தியகூறுகள் இருக்கின்றன. இந்த முறையை மக்களிடையே கொண்டு செல்ல அவர், Ecoscience Research Foundation (ERF) என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு, இந்த முகவரியில் அணுகவும்:
Ecoscience Research Foundation, 98 பாஸ் நகர், 3 /621 ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, சென்னை 41 தொலைபேசி: 04424480786 மொபைல்: 09384898358
நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக