திங்கள், 3 மே, 2010

வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது எப்படி?


பதினெட்டு வயதான சட்டப்படி மேஜரான, எவரும் வங்கியில் தம் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கலாம். அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்களுடைய அடையாளத் துக்கான சான்றாக பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி யைக் கொடுக்க வேண்டும். அடுத்து, உங்கள் வசிப்பிடத்துக்கான சான்றாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டெலி ஃபோன் பில், மின்கட்டண அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதியை அளிக்கலாம். மேலும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களும் கொடுக்க வேண்டும். ஒன்று உங்கள் விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும். இன்னொன்று வங்கியில் இருக்கும். உங் களுடைய மாதிரிக் கையெழுத்து அட்டையில் ஒட்டி வைக்கப்படும்.

இன்றைய நவீன தொழில் நுட் பத்தில், கேஷியருடைய கம்ப்யூட்டர் திரையில் பட்டனைத் தட்டியதும் ஸ்கேன் செய்யப்பட்ட உங்கள் கையெழுத் தும், புகைப்படமும் கம்யூட்டர் திரையில் தெரியும். செக்குகளில் உடனடியாக உங்கள் கையெழுத்தை சரிபார்க்க இது ரொம்ப சௌகரியம்.

பொதுவாக ஒரு வங்கிக் கிளையில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றால் அந்தக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், கணக்கு துவக்கும் விண்ணப் பத்தில் கையெழுத்துப் போட்டு உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். சில நாட் களில் வங்கியிலிருந்து உங்களை அறி முகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து உங்களை அறிமுகப்படுத்தியவருக்கு ஒரு கடிதம் போகும். `ஆஹா! நம் வங்கிக்கு நம் மீது எத்தனை நன்றி உணர்வு?' என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே உங்களை அவர் அறிமுகப்படுத்திக் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்களா? அல்லது நீங்களே அவரது கையெழுத்தைப் போட்டு போலி அறிமுகம் நடந்துள்ளதா? என்று கண்டுபிடிக்க எல்லா வங்கிகளும் கையாளும் உபாயம் இது என்பதை அறிக!

உங்களுடைய வங்கிக் கணக்கில் ரொக்கமாகவும், உங்கள் பெயருக்கு அளிக் கப்படும் செக்குகள், மற்றும் டிமாண்டு டிராஃப்ட்களையும் அதற்குரிய செலானை பூர்த்தி செய்து டெபாசிட் செய்யலாம். பணம் எடுப்பதற்கு வித்டிராயல் ஸ்லிப்கள் போதுமென்றால் அவற்றை மட்டும் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் பாஸ் புக் சகிதம் வங்கிக் கிளைக்கு நேரில் சென்றுதான் வித்டிராயல் ஸ்லிப் பயன் படுத்தி பணம் எடுக்க முடியும். அல்லது உங்கள் கணக்குக்காக செக் புக்குகளைப் பெற்றும் பயன்படுத்தலாம். வங்கி, குறிப் பிட்ட எண்ணிக்கை (இப்போதைக்கு 50) வரைதான் இலவசமாக செக் புக்குகள் தருவார்கள். அதற்கு மேல் செக் புக் தேவை என்றால் கட்டணம் உண்டு. கணக்கில் பணம் போடுவதற்கு இதுபோல கட்டுப் பாடுகள் ஏதுமில்லை.

இப்போதெல்லாம் பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்தி ருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு வழங்கி விடுகிறார்கள். இதனால் உங்கள் கணக்கி லிருந்து பணம் எடுக்க நீங்கள் வங்கிக்குப் போக வேண்டாம். உங்கள் வங்கியின் ஏ.டி.எம். மெஷினில் உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொண்டு விடலாம்.

டெபிட் கார்டு பயன்படுத்தி, உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள லாம். ஆனால் கிரெடிட் கார்டைப் பயன் படுத்தி நீங்கள் எடுக்கும் பணம், உங் களுக்கு சுமார் 24% வட்டி விகிதத்தில் தரப்படும் கடன் என்பதை மறந்துவிடாதீர் கள். (கிரெடிட் கார்டுகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்).
நன்றி! கல்கி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக