செவ்வாய், 18 மே, 2010

சுடொகு - The mental addictive number-placing puzzle

இங்கே நான் கனகநாயகம் குகராஜ் அவர்கள் எழுதிய சுடொகு பற்றிய கட்டுரையை தருகிறேன். இது ஒரு இலகுவான, விளையாட்டு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் சிறந்தது. சிறியவர்களுக்கான விளையாட்டுக்கள் இங்கே தரப்பட்டுள்ளது. பாவித்து பயன் பெறலாம். பெரியவர்கள் தேவையென்றால் சொல்லுங்கள் பெரியவர்களுக்கான மேலதிக புதிர்களை எடுத்துப் போடலாம்.

சுடொகு - The mental addictive number-placing puzzleசுடொகு (SUDOKU, 数 独) என்பது யப்பான் நாட்டில் 1986 ஆம் வருடத்தில் ஆரம்பமாகிய ஒரு 'குறுக்கு எண் புதிர்' ஆகும். இப் புதிரில் எண்கள் உபயோகித்தபடியால், இதனை 'இலக்கங்களை ஒருங்கமைக்கும் புதிர்' என மேற்குலக நாடுகளில் அழைத்தார்கள். இது தற்போதுதான் (2005 ஆம் வருடத்தில்) சர்வதேச சமூகத்தில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பிரபல்யமாகியுள்ளது.

சுடொகு (sudoku) என்பதற்கு யப்பானிய மொழியில் 'இலக்கங்களை அதற்குரிய இடங்களில் பொருத்துதல்' என்பது பொருள். சாதாரணமாக இது 9 x 9 சதுரமாக, (அதாவது 81 சிறு சதுரங்களாக) வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் 9 நிரல்களும் (columns), 9 வரிசைகளும் (rows) காணப்படும். இது மீண்டும் 3 x 3 (sub grids) அளவுள்ள 9 சிறு சதுரங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இலக்கங்கள் குறிக்கப்பட்டிருக்கும். மிகுதியாக விடப்பட்ட வெற்றிடங்களில் இலக்கங்களை நிரப்புவதே இந்த விளையாட்டின் நோக்கம்.இங்கு வெற்றிடங்களில் இலக்கங்களை நிரப்பும்போது, சில நிபந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு நிரல், வரிசை, அத்துடன் சிறிய 3 x 3 சதுரங்கள் எல்லாவற்றிலும், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எல்லா எண்களும் வருவதுடன், அனைத்து எண்களும் ஒரே ஒரு முறை மாத்திரமே ஒவ்வொரு நிரலிலும், ஒவ்வொரு வரிசையிலும், ஒவ்வொரு சிறிய 3 x 3 சதுரங்களிலும் இடம்பெற வேண்டும். இவற்றைக் கவனித்து, இப்புதிரை செய்வதுதான் இதிலுள்ள சிறப்பாகும்.

சுடொகு தற்போது ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது மாணவர்களின் காரண காரியங்களை விளக்கும் திறமை (reasoning skills) , மன ஒருமை (concentration) என்பவற்றில் முன்னேற்றத்தை தரும் ஒரு புதிர் விளையாட்டாகும். இதனை பாடசாலை வகுப்பறைகளில், வீடுகளில் மாணவர்களுக்கு ஒரு மூளைப்பயிற்சியாக (brain excercise) அறிமுகப்படுத்த முடியும். இதனை செய்வதற்கு கணித அறிவு தேவை இல்லை. இலக்கங்களை இனங்காணத் தெரிந்தாலே போதுமானதாகும். சுடொகு புதிர்களை பல இணையத்தளங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். 


குழந்தைகளுக்கு இந்த புதிர் ஆரம்பிக்கப்படுகையில் சுடொகு மினி (suduko mini) என்பதை அறிமுகப் படுத்தலாம். இது 4 x 4 கட்டங்களையும், 6 x 6 கட்டங்களையும் உள்ளடக்கி இருக்கும். இவற்றில் முறையே 1 தொடக்கம் 4 வரையிலான எண்களும், 1 தொடக்கம் 6 வரையிலான எண்களும் பாவிக்கப்படுவதுடன், மேலே கூறப்பட்ட நிபந்தனைகளும் கைக்கொள்ளப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒரு சுடொகு புதிரை விடுவித்ததும், மனதில் பெரிய திருப்தி ஏற்படும். தவிரவும் இது குழந்தைகளைப் பொறுத்த அளவில் மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் ஒரு வேடிக்கை விளையாட்டாகவும் இருக்கும். பெரியவர்கள் மத்தியில் இது மிகுந்த ஆர்வமான ஒரு புதிர் விளையாட்டாக இருக்கும்போது, குழந்தைகளும் இந்த விளையாட்டில் ஈடுபட நாம் அனுமதிப்பதுடன், ஊக்குவித்தலும் நன்மை பயக்கும்.

இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலில் நாம் இங்கு 4 x 4 சதுரவடிவான புதிரைக் கவனிப்போம்.Rule 1: ஒவ்வொரு வரிசையிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every ROW, you must have each of the numbers 1, 2, 3 and 4).

Rule 2: ஒவ்வொரு நிரலிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every COLUMN, you must have each of the numbers 1, 2, 3 and 4).

Rule 3: ஒவ்வொரு சிறுபகுதியிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every REGION, you must have each of the numbers 1, 2, 3 and 4).

அடுத்து, இங்கு 6 x 6 சதுரவடிவான புதிரைக் கவனிப்போம்.Rule 1: ஒவ்வொரு வரிசையிலும் 1, 2, 3, 4, 5, 6 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every ROW, you must have each of the numbers 1, 2, 3, 4, 5and 6).

Rule 2: ஒவ்வொரு நிரலிலும் 1, 2, 3, 4, 5, 6 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every COLUMN, you must have each of the numbers 1, 2, 3, 4, 5and 6).

Rule 3: ஒவ்வொரு சிறுபகுதியிலும் 1, 2, 3, 4, 5, 6 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every REGION, you must have each of the numbers 1, 2, 3, 4, 5and 6).
இவற்றிற்கு சில விளையாட்டுக்கள் பின்னர் இணைக்கிறேன். 


Diagonal form in Sudoku

We introduce an extra rule for these puzzles.


Rule 1: ஒவ்வொரு வரிசையிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every COLUMN, you must have each of the numbers 1, 2, 3 and 4).

Rule 2: ஒவ்வொரு நிரலிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every COLUMN, you must have each of the numbers 1, 2, 3 and 4).

Rule 3: ஒவ்வொரு சிறுபகுதியிலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every REGION, you must have each of the numbers 1, 2, 3 and 4).

Rule 4: ஒவ்வொரு மூலைவிட்டத்திலும் 1, 2, 3, 4 வரை இலக்கங்கள் இருக்க வேண்டும் (In every DIAGONAL, you must have each of the numbers 1, 2, 3 and 4).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக