சனி, 8 மே, 2010

சட்டம் என்ன சொல்கிறது?

* சென்னை, மும்பை, கொல்கத்தா... உயில் பற்றி சில சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கு விளக்கம் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். `சார்டர்டு சிட்டிஸ்' (இடச்ணூணாஞுணூஞுஞீ ஞிடிணாடிஞுண்) என்று குறிப் பிடப்படும் நகரங்களுக்கு உட்படாத பகுதிகளில் சொத்துக்கான உயில்களின் நிலை என்ன?

- ராஜகோபால்.
சென்னை-116


சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்தே சார்டர்டு சிடிஸ் என குறிப்பிடப்படுகின்றன. இந்த நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து இருந்தாலோ, அல்லது உயிலை எழுதி யவர் வசித்தாலோ அவரது மறைவுக்குப் பின் அந்த உயிலை முறைப்படி நீதி மன்றத்தில் மனு செய்ய வேண்டும். இன்னார் எழுதிய உயிலின்படி, அவரது சொத்துக்கள் சட்டப்படி இன்னாருக்குப் போய்ச் சேருகிறது என்று அங்கீகாரம் பெற வேண்டும். அதன் பிறகு சம்பந்தப்பட் டவர், அந்தச் சொத்துக்கு உரிமை கொண் டாடுவது நடைமுறை.

இந்த மூன்று நகரங்களுக்குள் வராத சொத்து என்றால் இதற்கு இரண்டு விளக்கங்கள் சொல்ல வேண்டும். அந்த உயிலில் குறிப் பிட்டுள்ள சொத்துக் களை அவரது சட் டப்படியான வாரிசு கள் தங்களுக்குள் பாகம் பிரித்துக் கொள்ள வேண் டும். பிரச்னை ஏதுமில்லாமல் சுமுகமாகப் பிரிவினை செய்து கொள்வதென்றால் அவர்கள் நீதிமன்றத்துக்குப் போக வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை, பங்கு பிரித்துக் கொள்வதில் ஏதாவது சிக்கல் என்றால், நீதிமன்றத்துக்குப் போய் உயிலின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும்.

நீதிமன்றத்துக்குப் போகிறபோது அந்த உயிலை எழுதியவர் உயிரோடு இல்லாத தால், அந்த உயிலில் கையெழுத்திட்டுள்ள சாட்சிகள் அளிக்கும் வாக்குமூலங்களுக்கே நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கும்.

* என் கணவர், அரசு உத்தியோ கத்தில் இருக்கும் போது வீட்டுக் கடன் வாங்கி, வீட்டை கட்டினார். கிட்டத்தட்ட கடன் முடியும் வேளையில், அகால மரணமடைந்தார். அவர் வேலை பார்த்த அலுவலகத்தினர், அந்த வீட்டுக்கான பத்திரத்தை சப்-ரிஜிஸ்திரார் முன்னிலை யில் என்னிடம் ஒப்படைத்து விட்டார் கள். கடந்த பதின்மூன்று வருடங்களாக வீடு என் கணவர் பெயரிலேயே உள்ளது. மேலும், இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் வாங்கிய காலி மனையும் அவர் பெயரில்தான் உள்ளது. பத்திரத்தில் வில்லங்கம் ஏதுமில்லாவிட்டாலும் அந்த நிலத்துக்காக கட்டப்பட்ட தீர்வை குறித்த விவரம் எதுவுமே எனக்குத் தெரிய வில்லை.

எனக்கு ஒரு பையன்; ஒரு பெண். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தற்சமயம் வீட்டில் சில பிரச்னைகள் நிலவுவதால், வீட்டை என் பையனுக் கும், மனையை என் பெண்ணுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளேன். அதை எப்படிச் செயல்படுத்துவது? சொத்துக்கள் என் பெயரில் இல்லாததால், என் பிள்ளைகள், அவர்களது விருப்பப்படி சொத்தை அனுபவித்துக் கொள்ள முடியுமா? வீட்டை என் பெயருக்கு மாற்ற வேண்டும் எனில் வழி உண்டா? பிள்ளைகளுக்கு இந்தச் சொத்துக்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால், கடைசி வரை நான் என் பொறுப்பில் வைத்துக் கொள்ள என்ன வழி?

- ராஜம், திருநெல்வேலி

உங்கள் கணவர் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டாலும், `வாரிசு உரிமை' சட்டப்படி, அந்த சொத்துக்கு நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. சொத்துக்களையும் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட முடியாது. உங்களு டன் உங்கள் மகன், மகள் ஆகிய மூவர் மட்டுமில்லாமல், உங்களது மாமியார் (அதாவது கணவரின் தாய்) உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவருக்கும் சேர்த்து நான்கு பேருக்குமே அந்த வீடு மற்றும் மனை ஆகிய சொத்துக்களின் பேரில் உரிமை உண்டு. எனவே, இந்த நான்கு பேரும் அந்த வீடு, மனை இரண்டையும் சமமாகப் பாகப்பிரிவினை பத்திரம் மூல மாகப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.

உங்களில் யாராவது ஒருவர் தனக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என்று நினைத்தால், தன்னுடைய பங்கு இன்னா ருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று அதற்குரிய பத்திரம் (இதை ணூஞுடூஞுச்ண்ஞு ஞீஞுஞுஞீ) என்பார்கள்) எழுதிக் கொடுத்து விடலாம்.


* ஒரு தந்தைக்கு ஆறு குழந்தைகள். அவர் தான் சுயமாகச் சம்பாதித்த சொத் தான வீட்டு மனை, அதில் கட்டிய வீடு இரண்டையும் தனக்குப் பிரியமான தன் ஐந்தாவது மகளுக்கு, தன் மனைவி மற்றும் பதிவாளர் முன்னிலையில் சுய சிந்தனையோடு செட்டில்மெண்ட் பத்தி ரம் எழுதிக் கொடுத்துவிட்டார். மேற்படி சொத்துக்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவரது இரண்டாவது மற்றும் நான்காவது மகன்கள் சேர்ந்து, பாகப் பிரிவினை வழக்கு ஒன்று போட்டி ருக்கிறார்கள்.

இந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாமல், சிலரது தூண்டுதலில் தான் போடப்பட்டுள்ளது. பல வாய்தாக்களுக்குப் பிறகு, அந்த வழக்கு இப்போதுதான் விசாரணைக்கு வருகிறது. செலவுத் தொகை வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்யும்படி முதல் விசாரணையின் போதே கோர முடியுமா? எந்தச் சட்டப் பிரிவின்படி அணுக வேண்டும்? (பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி)

நீங்கள் குறிப்பிட்ட நபர் சுயநினை வோடு, தன் மனைவி மற்றும் பதிவாளர் முன்னிலையில் செட்டில்மெண்ட் பத்தி ரத்தை எழுதியதாகக் கூறப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொள்ளாமல், இப்போது நீதிமன்றத்துக்குப் போயிருக்கும் அவரது மகன்கள், முதலில் அந்த செட்டில்மென்ட் பத்திரம் சுயநினைவோடு எழுதப்பட்ட தில்லை அல்லது கட்டாயப்படுத்தி எழுதி வாங்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அல்லது சுயநினை வோடு, சாட்சிகள் முன்னிலையில் பத்திரம் எழுதப்பட்டாலும் அது பின்னர் அவரா லேயே சுயநினை வோடு, யாருடைய கட் டாயமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு விட் டது என்றால், அதை யும் நீதிமன்றத்தில் நிரூபித்து, சர்ச்சைக் குரிய செட்டில் மெண்ட் பத்திரம் செல் லாது என்று அறிவிக்கச் செய்ய வேண்டும்.

அதனை அடுத்து, சட்டபூர்வமான வாரிசு கள் எல்லோரும் சட் டப்படி அந்த சொத்துக்களைப் பாகப்பிரி வினை செய்து கொள்ள வேண்டும். ஆகவே, எடுத்த எடுப்பிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி கோர முடியாது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல இந்தவழக்கில் பத்திரத்தை எழுதியவர் (உயிரோடு இருக்கும்பட்சத்தில்), அது எழுதப்பட்டபோது உடன் இருந்த அவரது மனைவி, சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் ஆகியோர்களது வாக்குமூலம் மிகவும் முக்கியமானது.

எழுத்து, வடிவம் : எஸ். சந்திரமௌலி
சட்டம் என்ன சொல்கிறது? 

7 கருத்துகள்:

 1. தான செட்டில்மெண்ட் டை ஒரு வருடம் முடிவடைதற்குள் பரிவர்த்தனை மாற்றம் செய்யலாமா?

  பதிலளிநீக்கு
 2. எனது தந்தையார் எனக்கு பூர்வீக நிலத்தில் ஒருபகுதியை எனக்கு தான செட்டில்மென்ட் 2௦௦2 மார்ச் எழுதி கொடுத்தார். அதில் நான் கடை மற்றும் வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். இப்போது எனது இளைய தம்பி வழக்கு தொடர்ந்து இந்த தான செட்டில்மென்ட் செல்லாது என்று கூற நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த சொத்து எனது தகப்பனாரால் வாங்கப்பட்டது அல்ல. போர்வீக மானது. எனது தம்பிக்கு என்று தனியாக நிலம் இதில் உள்ளது. ஆனால் எனது வீட்டையும் கடையையும் காண்பித்து அதுதான் வேண்டும் என்கிறான். எனது தந்தையார் மீதமுள்ள நிலத்தில் அதே அளவு நிலம் தருவதாக கூறுகிறார். இதனை எங்கும் மனநிலையில் அவர் இல்லை. எனக்கு தான செட்டில்மேண்டாக எழுதிகொடுத்த நிலத்தை எனது பெயரில் பட்ட செய்துள்ளேன். கடந்த 13 ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நான் அனுபவித்து வருகிறேன். ஆகையால் எனது தம்பியின் நடவடிக்கையால் எனது வீடு மற்றும் கடை ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை வருமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. 1. ஒரு தந்தை தனது பூர்வீக சொத்தை தனது ஒரு மகனுக்கு ஒரு பகுதியை தான செட்டில்மெண்ட் செய்து கொடுக்கலாமா.
  2.தானசெட்டில்மென்ட் பெறப்பட்ட சொத்தில் அவரது மகன் வீடுகட்டி அதனை முறைப்படி பட்டா பெற்றுள்ளார். இது முறைப்படி செல்லுபடியாகுமா!
  3.அதன்பின் 13 ஆண்டுகள் அனுபவித்து உள்ளார். இந்த சொத்திற்கு அனுபவபாத்தியம் உண்டா?
  4.இவ்வளவு ஆண்டுகளுக்கு பின் இவரது தம்பி அந்த சொத்தில் பங்கு கேட்டு கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.
  இதனால் முன்னவர் பெற்ற தான செட்டில்மெண்ட் செல்லாதாக்க முடியுமா"

  பதிலளிநீக்கு
 4. எங்கள் காணியில் இருக்கும் கிணற்றில் பக்கத்தில் இருக்கும் காணிக்காரர்களுக்கு எவ்வாறு பங்கு கொடுப்பது? எங்கள் தாய் பத்திரத்தில் பங்கு காட்டப்படவில்லை

  பதிலளிநீக்கு
 5. ஐயா வணக்கம்
  எங்க தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து 785 சஅ அந்த சொத்த அவருடைய இரண்டு மகள், ஒரு மகன், ஒரு கொள்ளு பேரண் ணுக்கும் ( 1st மகளுடைய பேரண்) 2010தில் தான செட்டில்மன்ட் எழுதி தந்துள்ளார் சர்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யபட்டுள்ளது 2010ல்
  அவருடைய மகன் (எங்க மாமா) 2012ல் காலமாகிவிட்டார்..
  எங்க தாத்தா 12-12-2014 அன்று காலமாகிவிட்டார்.
  தற்பொழுது எங்க மாமா பிள்ளைகளுக்கு 10-12-2014 அன்று உயில் எழுதி கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அந்த உயில் தற்பொழுது வரை பதிவு செய்யபடவில்லை. அவர்கள் எங்களை மிரட்டுகிறர்கள் மொத்த சொத்தும் அவர்களுக்குதான் சொந்தம் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 6. ஐயா வணக்கம்
  எங்க தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து 785 சஅ அந்த சொத்த அவருடைய இரண்டு மகள், ஒரு மகன், ஒரு கொள்ளு பேரண் ணுக்கும் ( 1st மகளுடைய பேரண்) 2010தில் தான செட்டில்மன்ட் எழுதி தந்துள்ளார் சர்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யபட்டுள்ளது 2010ல்
  அவருடைய மகன் (எங்க மாமா) 2012ல் காலமாகிவிட்டார்..
  எங்க தாத்தா 12-12-2014 அன்று காலமாகிவிட்டார்.
  தற்பொழுது எங்க மாமா பிள்ளைகளுக்கு 10-12-2014 அன்று உயில் எழுதி கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அந்த உயில் தற்பொழுது வரை பதிவு செய்யபடவில்லை. அவர்கள் எங்களை மிரட்டுகிறர்கள் மொத்த சொத்தும் அவர்களுக்குதான் சொந்தம் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 7. என் தாத்தாவிற்கு நான்கு மகன்கள் பூர்வீக சொத்தை நான்கு மகன்களின் கையோப்பமும் இன்றி கடைசி மகனின் 2 மகன்களின் பெயரில் கிரைய பத்திரம் எழுதிவைத்து விட்டார் மற்ற மகன்களும் அவர்களுக்கு வாரிசு உள்ளனர் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?

  பதிலளிநீக்கு