வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மூளை வளர்ச்சி குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதே சிறந்தது!

disable-2nd‘மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கை‘ என்ற தலைப்பில் நாம் எமது இணையத்தளத்தில் மார்ச் மாதம் 19 ஆம் திகதி கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.வாசகர்களே! அதன் இரண்டாம் பாகம் தொடருகின்றது.
இலங்கையில் மாத்திரமின்றி உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் மூளை வளர்ச்சிக்குன்றி நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறு குறைப்பாட்டுடன் பிறப்பதற்கு காரணம் என்ன? சிலர் பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தைகளாக இருக்கிறார்கள் சில வருடங்கள் செல்ல அவர்களுடைய செயல்பாடுகள் மாற்றத்தினால் அவர்கள் இனம்காணப்படுகிறார்கள் எனவே இதற்கு மருத்துவ ரீதியில் விளக்கம் அளிக்கிறார் டாக்டர் நஜீமுடீன்…நேர்காணல் எம்.சாந்தி
கேள்வி: இவ்வாறு குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் என்ன?
dr-1எமது சகல வேலைகளையும் செய்வதற்கு மூளையே கட்டுப்பாட்டறை. இங்கிருந்துதான் கட்டளைகள் செல்ல வேண்டும், அவற்றினைத்தான் உடலின் ஏனைய பகுதிகள் நிறைவேற்ற வேண்டும். இந்த மூளை பாதிப்படைகையில்தான பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.மூளை வளர்ச்சி ஆரம்பிப்பது முளையில், அதாவது கருவில். அது மூன்று வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் 16 வயது வரை அபிவிருத்தியடைகிறது. வளர்ச்சி என்பது வேறு, அபிவிருத்தி என்பது வேறு.வளர்ச்சி என்பது மூளையின் அளவிலும் கலங்களின் எண்ணிக்கையலும் ஏற்படும் அதிகரிப்பு, அபிவிருத்தி என்பது அந்தக் கலங்கள் சிக்கலான தொழற்பாடுகளுக்கென இசைவாக்கமடைதல்.
இந்த வளர்ச்சியின் அசாதாரண நிலையென்பது
1. ஜீவ அணுவிலிருந்து நிறமூர்த்தங்களால் தீர்மானிக்கப்படலாம் ( உ-ம் டௌண் சிண்ட்ரோம்)
2. குழந்தையின் உருவாகும் திறனினால் தீர்;மானிக்கப்படலாம்
3. தாய்க்கு ஏற்படும் நோய்களினால் பாதிப்படையலாம் (உ-ம் ருபெல்லா, மலேரியா, நீரிழிவு, உயர் இரத்தத்துடன் சேர்ந்த வலிப்பு (நுஉடயஅpளயை) போன்ற பல நோய்கள்)
4. மூளை வளர்ச்சிக்குத் தேவையான போஷாக்குகள் மற்றும் பிராணவாயுக் குறைவுகளால் ஏற்படலாம்.
5. மூளை நேரடியாக தொற்று நோய்க்காளாகிப் பாதிப்படையலாம்
6. குழந்தையைப் பிரசவிக்கையில் ஏற்படக் கூடிய பலவித பிரச்சினைகளால் ஒட்சிஜன் மற்றும் குளுக்கோஸ் ஆகியன குறைவடைந்து மூளைக் கலன்கள் பாதிப்படையலாம் உ-ம்:- கழுத்தைச் சுற்றிய மாக்கொடி, தடைப்பட்ட பிரசவம், சிக்கலான (ஆயதப் )பிரசவம் மற்றும் அதன் தாக்கங்கள்.பிரசவத்திற் போது தலை நசிவடைதல். காயமடைதல்)
7. பிரசவத்தின் பின்னரான தொற்றுக்கள் மூளையைத் தாக்குதல் ( உ-ம் மூளைக் காய்ச்சல், நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய எந்த நோய்களும்) மூலம் ஏற்படலாம்
இவ்வாறு பலவித காரணங்களால் இந்தப் பரிதாப நிலை சம்பவிக்கிறது
கேள்வி:தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தைகள் இவ்வாறான தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறிய முடியுமா?
ஒரு சிலவற்றைக் கண்டறியலாம். உ-ம் சிறிய. பெரிய தலைகள் (மைக்ரோசெபலி, மாக்ரோ செபலி, முண்ணாண் குறைபாடுகள். இன்னும் பல பிரச்சினைகள் ஸ்கேன் மூலமோ அல்லது கருப்பாயச் சோதனை(அம்னியோடிக் நீர்) மூலமோ கண்டறியப்படலாம்
கேள்வி: அவ்வாறான வேளையில் மருத்துவ ரீதியில் எவ்வாறான சிகிச்சைகளை வழங்கப்படும்?
சில வேளைகளில் கருச்சிதைவு சிபாரிசு செய்யப்படும். ஆனால் கண்டறிவதற்குத் தாமதமானால் பிரச்சினை தீர்வின்றித் தொடரும். இதில் ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால் இப்படியான குழந்தைகள் உயிருடன் பிறப்பதோ பிறந்து கன நாள் உயிர் வாழ்வதோ மிகவும் குறைவானது.
கேள்வி: பிறந்தவுடனே குழந்தையில் இந்த குறைப்பாட்டை கண்டறியும் பட்சத்தில் இவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக பிரத்தியோகமான மருத்துவ மனைகள் ஏதும் உண்டா?
இல்லை. ஆனால் இவர்கள் விஷேட கவனிப்புக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுவர்
கேள்வி: இக்குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதாயின் அவர்களை எவ்வாறு பாராமரிப்பது சாதாரண முறையினை கூறுங்கள்?
வீட்டில் வைத்துப் பராமரிப்பது என்பது மிகவும் சிறந்தது. ஆனால் அதற்கு விஷேட பயிற்சி அவசியமாகிறது, நிறையப் புரிந்துணர்வு, உதவி, ஏனையோரது ஒத்துழைப்பு, பொறுமை எல்லாம் அவசியம். முக்கியமாக ஏனைய குழந்தைகளின் ஆதரவான அரவணைப்புத் தேவைப்படும்.
சாதாரணமாக அதற்கென ஒருவர் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். முக்கியமாக உணவு, உடை, சுகாதாரம், ஏனைய தேவைகள், பயிற்சிக்கென விஷேட முகாம்களுக்குக் கொண்டு செல்லல் ஆகியன அவசியப்படலாம்
கேள்வி: இவர்கள் ஓரளவு குணம் பெற்றப்பின் சாதாரண மக்களைப்போல வேலைக்குச்செல்லலாமா? திருமணம் முடிக்கலாமா?
சிரமமான ஒரு கேள்வி, மூளை வலுவிழந்த மனிதன் குணமடைவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனெனில் இது ஒரு நோயல்ல குணமடைவதற்கு. ஒரு குறைபாடு. மூளைக் கலங்கள் இறந்த பின் அவை மீண்டும் வளருவதுமில்லை, புதுப்பக்கப்படுவதுமில்லை.
எனவே ஒரு குறைபாடு உள்ள குழந்தையின் குறைபாட்டின் கனதியினைப் பொறுத்து இது மாறுபடலாம். திருமண முடித்து வாழந்தவர்களும் இருக்கின்றனர்
கேள்வி: இவ்வாராண குறைப்பாடுகளுடன் குழந்தைகள் இனிவரும் காலங்களில் பிறக்காமல் இருக்க கர்ப்பிணிகள் தங்களுடைய பிரசவ காலம் வரை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?
அதற்கென எடுத்த ஒரு நடவடிக்கைதான் ருபெல்லா எனும் பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இருந்தாலும் கூட பரம்பரை, நிறமூர்த்த, நுகத்தின் பிழையான உருவாக்கம் போன்ற தவிர்க்க முடியாத பிரச்சினைகளைக் கைவிட்டாலும் இந்த நிலைமையினைத் தவிர்க்கக் கூடிய பல நடவடிக்கைகள் எம்முன் உள்ளன.
1. உரிய வயதில் குழந்தை பெறல்( 40 அல்லது 45இற்குக் கூடிய வயதிலும் 18-19 வயதுக்குக் குறைந்த வயதிலும் குழந்தை பெறுதலைத் தவிர்த்தல்)
2. திருமண பந்தத்தில் இரத்த சொந்தங்கள் இணையாதிருத்தல்
3. இடைவெளி விட்டு அளவோடு பெறல்
4. கர்ப்பிணியானவுடன் நன்கு விடயம் தெரிந்த வைத்தியரின் கண்காணிப்பின் கீழ்வருதல்.
5. கர்ப்ப காலப் பராமரிப்பினை முறையாகப் பேணல்
6. கர்ப்ப காலத்தில் நோய் நொடிகள் அணுகாமலும், சிறந்த போஷாக்கினைப் பெற்றும் அமைதியாகவும் ஆறுதலாகவும் காலத்தைக் கடத்தல்
7. வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையில், பரிச்சயப்பட்ட வைத்தியரின் கண்காணிப்பில் பிரசவித்தல்
8. பாதுகாப்பான ருபெல்லா, மற்றும் மலேரியா பிரதேசமானால் அதற்குரிய தடுப்பு மருந்து மட்டுமல்லாது போலிக்கமில மாத்திரையினையும் தவறாது எடுத்துவரல்.
9. பிள்ளையை நோய்க் கிருமிகள் தொற்ற விடாது பாதுகாத்தல், தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளல்
10. தாய்ப்பாலூட்டல்,சிறந்த போஷாக்கினை அளித்தல் போன்ற இன்னும் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக