வெள்ளி, 13 ஏப்ரல், 2012

முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு !

மனித சிறுநீர் உரமாக பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் பயன் படுத்துவது பற்றி நாம் முன்பே படித்து இருக்கிறோம். சிறுநீர் 100% sterlie திரவம் ஆகும். இதன் மூலம் எந்த வியாதியும் பரவ வாய்ப்புகள் குறைவு.
இப்போது, நம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில், சிறுநீர் சேர்த்து அதில் இருந்து உரம் தயாரிக்க டெல்லியில் உள்ள இந்தியா தொழில் நுட்ப பல்கலைகழகமும் (IIT Delhi),  Society for Community Organisation and People’s Education (SCOPE) என்ற நிறுவனமும் ஒரு முயற்சியை ஆரம்பிக்க போவதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்ரிகையில் செய்தி வந்துள்ளது.
சிறுநீரில் பாஸ்போருஸ், நைட்ரோஜென் மற்றும் போடாசியும் அதிகம். இவற்றை உரமாக பயன் படுத்துவதால், இயற்கையாக கிடைக்கும் பொருளில் இருந்து நமக்கு உரம் கிடைக்கிறது. விவசாயிகளின் செலவும் குறைகிறது.
மேலும் விவரங்களுக்கு : SCOPE Trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக