வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இயற்கை உரம் மூலம் தழைச்சத்து

தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தலாம்
  • பயிர்களுக்கு அதிக தழைச்சத்து கிடைக்க விவசாயிகள் தக்கை பூன்கு என்ற இயற்கை உரத்தினை பயன்படுத்தலாம்
  • தக்கை பூன்கு என்ற புல் வகைப் பயிரினை விவசாயிகள் தற்போது தங்கள் நிலத்தில் விதைக்கலாம்.
  • இந்த பயிர் விதையை லேசான ஈரமுள்ள நிலத்தை உழுது அதில் 35 முதல் 40 நாட்களுக்கு பின் அந்த பயிரை மீண்டும் ஒரு உழவு செய்து தங்கள் நிலத்தில் உள் மடிய செய்ய வேண்டும்.
  • பின்னர் அந்த நிலத்தில் எந்த பயிரை பயிரிட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.
  • இவ்வாறு செய்வதால் பயிருக்கு தழைச்சத்து கிடைக்கிறது.
  • பயிருக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. மண் வளம் அதிகமாக இருக்கும்.
  • அந்தக் காலங்களில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள மரங்களின் குழைகளை அறக்கி தங்கள் விவசாய நிலத்தில் மக்க வைப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது நடப்பதில்லை. மரம் கிடைப்பது அரிது. அதிலுள்ள குழைகளை அறக்கி நிலத்திற்கு எடுத்து செல்ல அதிக செலவாவதால் விவசாயிகள் செய்வது இல்லை. எனவே இந்த தக்கை பூன்கு பயிரை பயிரிட்டு விவசாயிகள் அதிக பயன் பெற
  • இந்த பயிரின் விலை கிலோ ரூ.40 ஆகும். இதில் அரசு மானியம் கிலோவுக்கு ரூ.20 போக மீதி ரூ.20 மட்டுமே கிரையம் ஆகிறது.
  • ஒரு ஏக்கருக்கு 20 கிலோ முதல் 25 கிலோ வரை தேவைப்படும்.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக