வெள்ளி, 13 ஏப்ரல், 2012

பயறு ஒன்டர் – பயறுகளுக்கான ஒரு பூஸ்டர்

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் தேசிய வேளாண் அறிவியல் மையத்தில், “பயறு ஒன்டர்’ என்ற புதிய நுண்ணூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பயறு சாகுபடியில் வறட்சியை தாங்கி, 20 சதவீதம் அதிக மகசூலைத் தரக்கூடியது.  இது ஒரு பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்.
பயன்கள்
  • பூக்கள் உதிர்வது குறையும்
  • பயிறு விளைச்சல் 20 சதம் வரை கூடும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை
  • அளவு: ஏக்கருக்கு 2.25 கிலோ
  • தெளிப்பு திரவம்:200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்:பூக்கும் பருவம்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
தமிழ்நாடு வேளாண் பல்கலையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நுண்ணூட்டத்தின் செயல் விளக்க பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
விபரங்களுக்கு 04322290321 என்ற வேளாண் அறிவியல் நிலைய தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக