வெள்ளி, 13 ஏப்ரல், 2012

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.
இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.
இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம்
  • இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.
  • விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.
  • பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.
  • பின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.
  • காலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • தொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும்.
  • டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.
  • இவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும்.
  • டன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.
  • இதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.
இவ்வாறு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராமமூர்த்தி மற்றும் பேராசிரியர் அன்புமணி தெரிவித்தார்.
நன்றி: தினமணி

1 கருத்து: